தமிழக கம்மவார் மக்கள், திருமண பந்தங்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்பர். கம்மவார் மக்களுக்குள், திருமணம் செய்துகொள்ளவும் உறவுமுறை சரியாக அமைத்துக்கொள்ளவும் வீட்டுப்பெயர்களையே பயன்படுத்துகின்றனர்.
உதாரணமாக, தென்மாவட்டங்களில் புலிப்பாட்டியார் வீட்டுக்காரர்கள் செருக்கூரார்களுடன் சம்பந்தம் வைத்துக்கொள்வர். இதுபோன்று ஆயிரக்கணக்கான வீட்டுப்பெயர்கள் கம்மவார்களுக்கிடையே உண்டு. அந்தந்த பகுதிகளில் அந்தந்த வீட்டுப்பெயர்களை வைத்து முறையறிந்து திருமணம் செய்யப்படும்.
ஆனால், உறவுமுறை என்பது கோத்திரத்தை வைத்து அறியப்படுவதாகும். இன்ன கோத்திரத்தவர், இன்னாருக்கு தாயத்தார் என்றும் இன்னாருக்கு சம்பந்திகள் என்றும் உண்டு. வீட்டுப்பெயர்கள் அதிக அளவில் பயன்பாட்டுக்கு வரும்வரையில், கோத்திரப் பெயர்களையே பயன்பாட்டில் வைத்திருந்தனர் கம்மவார் நாயக்கர்கள். உதாரணமாக, காகதீயர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள் முசுனூரி நாயுடு வீரர்கள். அவர்கள் சார்ந்த முசுனூரு கிராமத்தின் பெயர் இன்றளவும் பல கம்மவார் குடும்பத்தவர்களுக்கு கோத்திரமாய் உள்ளது. அது முசுனுல்ல (முசுனூரு) கோத்திரம் எனப்படுகிறது. அதே கிராமத்தைக் குறித்த வீட்டுப்பெயரும் முசுனூரி (முசுனூரு) என்றுள்ளது. அதுபோலவே பல வீட்டுப்பெயர்களும் கோத்திரங்களும் ஆந்திரப் பிராந்திய கிராமப்பெயர்களில் இருந்து வருகின்றன. உதாரணமாக பெம்மசானி முதலான வீட்டுப்பெயர்கள் உடையவர்களுக்கு முசுனுல்ல என்பது கோத்திரமாக இருந்துவருகிறது. அதுபோல, வேறு கோத்திரம் உடைய மக்களுக்கும் முசுனூரு வீட்டுப்பெயராக இருக்கின்றது. இவ்வாறு, ஒரு வீட்டுப்பெயரில் வெவ்வேறு கோத்திரங்களும், ஒரு கோத்திரத்துள் வெவ்வேறு வீட்டுப்பெயர்களும் இருக்கும்.
வீட்டுப்பெயர்கள் பூர்வீக அடையாளமாகவும், கோத்திரங்கள் வம்சத்தின் அடையாளமாகவும் கம்மவார் மக்களால் பாதுகாக்கப்பட்டு, பயன்படுத்தப்படுகின்றன.
முந்தைய நாளில் கோத்திரப் பெயர் பார்த்து திருமணம் செய்துவந்த கம்மவார் மக்கள், தற்பொழுது வீட்டுப்பெயர்களைக் கொண்டு முறை அறிகின்றனர். இது இன்னும் எளிதான முறை ஆகும்.
வீட்டுப்பெயர்கள் வைத்துப் பார்க்கும்பொழுது, இருவீட்டார்கள் ஒரு ஊரில் பங்காளிகளாகவும் ஒரு ஊரில் சம்பந்திகளாகவும் இருப்பர். இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால், ஒரு வீட்டாருக்குள்ளே இருக்கும் வெவ்வேறு கோத்திரங்கள். எனவே, வீட்டுப்பெயரை வினவியவுடன் எந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் என்று பார்ப்பர். இந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் எனில், இன்ன கோத்திரத்தவர்களாக இருப்பர், எனவே பங்காளி முறை என்றும், அதே வீட்டுக்காரர்கள் அந்த சுற்றுவட்டாரத்தவர்களாக இருப்பின், சம்பந்திகள் என்றும் அறிந்துகொள்வர்.
இவ்வாறு, சரியான முறைபார்த்து திருமணம் செய்யும் விசயத்தில் கம்மவார்கள் கட்டுக்கோப்பாக இருப்பர்.

No comments:
Post a Comment